search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்"

    தக்கலையில் மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தக்கலை:

    தக்கலையை அடுத்த மணலி சந்திப்பில் இருந்து கொல்லன் விளை வரை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற உள்ளது.

    தக்கலையில் மேம்பாலம் கட்டினால் இந்த பகுதியில் உள்ள வர்த்தகர்கள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    எனவே மேம்பாலம் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வர்த்தகர் சங்கம், வணிகர் சங்கம், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    இந்த நிலையில் இன்று தக்கலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மேம்பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் ஹனுக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முளகுமூடு வட்டார முன்னாள் குருகுல முதல்வர் ஜார்ஜ் பொன்னையா கலந்து கொண்டார்.

    மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் தம்பி விஜய குமார், மாவட்ட வக்கீல் அணி தலைவர் ஏசுராஜா, தக்கலை வட்டார தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், மாவட்ட செயலாளர் ஜாண் இக்னேசியஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜேஷ் குமார், வின்சென்ட் ராஜ், புரோடிமில்லர் உள்பட திரளான காங்கிரசார் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கர்நாடகத்தில் எம்எல்ஏக்களை இழுப்பதற்கு குதிரை பேரம் நடப்பதாக கூறி, பாஜக எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் ஓட்டல் அருகே காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #Congress #KarnatakaBJP
    புதுடெல்லி:

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜனதாவில் சேரப்போவதாகவும், இதற்காக குதிரை பேரம் நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாகவும், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காகவும் கர்நாடக பா.ஜனதா எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

    இந்நிலையில், டெல்லி அருகே உள்ள குருகிராமத்தில் பாஜக எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓட்டலில் தங்கியிருக்கும் பாஜக எம்எல்ஏக்கள், குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

    இதற்கிடையே மும்பை ஓட்டலில் தங்கியிருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், விரைவில் அவர்கள் கர்நாடகத்திற்கு வருவார்கள் என்றும் முதல்வர் குமாரசாமி கூறினார். கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என்றும் அவர் கூறினார். #Congress #KarnatakaBJP

    பணமதிப்பு இழப்பீட்டை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் அரியலூரில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர்-திருச்சி சாலையில் உள்ள அரியலூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட  இ.காங்கிரஸ் சார்பில் பணமதிப்பு இழப்பீட்டை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி தர மறுத்ததால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

    இதில்  மாவட்ட தலைவர் ஜி.ராஜேந்திரன், நகரதலைவர் சந்திரசேகர், வட்டார தலைவர் தியாகராஜன், கர்ணன், திருமானூர் பாண்டியராஜன், சீமான் மூப்பனார், தா.பழுர் சக்ரவர்த்தி, மாரிமுத்து, ஜெயங்கொண்டம் செங்குட்டுவன், நகரதலைவர் ஜாக்சன், ஆண்டிமடம் கொடியரசு, மாசிலாமணி, செந்துறை கொளஞ்சிநாதன், உடையார்பாளையம் ஜெயராமன், மாவட்ட பொருளாளர் மனோகரன், தொழிற்சங்கம்  சிவக்குமார், சேவாதளம் சிவா, மகிளா காங்கிரஸ் சின்ன பொண்ணு, மாரியம்மாள், தமிழரசி, தொகுதி தலைவர் திருநாவுக்கரசு  உட்பட 50 பேர் கலந்து கொண்டனர். 

    அனுமதியை மீறி மறியலில் ஈடுபட்டதால் 50 பேரும் கைது செய்யப்பட்டனர்.
    மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #congressdemonstratin
    திண்டுக்கல்:

    உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதனால் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் சாமானிய மக்கள் இன்னும் துன்பப்பட்டு வருவதாக கூறி நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    திண்டுக்கல் நாகல்நகரில் மாநகர மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், நிர்வாகிகள் அரபுமுகமது, சிவாஜி, ராஜாஜி, சீனிவாசன், காஜா மைதீன், அஜித், அப்துல் ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த நாளை கருப்பு தினமாக அனுஷ்டிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். #congressdemonstratin
    பண மதிப்பிழப்பின் மூலம் மக்களை வஞ்சித்த மத்திய அரசை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #congress #demonstration #centralgovernment

    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பண மதிப்பிழப்பின் மூலம் மக்களை வஞ்சித்த மத்திய அரசை கண்டித்து தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., எம்.என். கந்தசாமி, பி.வி. மணி, பச்சைமுத்து, கே.பி.எஸ். மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கட்சி நிர்வாகிகள் மகேஷ்குமார், கணபதி சிவக்குமார், கே.பி துரை, சவுந்தர்குமார், வக்கீல் கருப்பசாமி, பழையூர் செல்வராஜ், கே.வி.செல்வராஜ், ராமநாகராஜ், கோவை போஸ், காந்தகுமார், குணசேகரன், கே.என் வசந்த், ஜீ. ஆர். சீனிவாசன்,

    ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, காட்டூர் சோமு, பட்டம்மாள், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே. குமரேசன், விஜய் சாந்த், சர்ச்சின் சிவக்குமார், இதயம் ரகுமத்துல்லா, கேபிள் வினோத், மகளிர் காங்கிரஸ் தலைவி உமா மகேஸ்வரி, கார்த்தி, எம்.துளசி ராஜ், ராயல்.சி.மணி, பாசமலர் சண்முகம், விஜயகுமார், அசோக் குமார், கணேசன், சீரா கணேசன், கர்ணன், ஆனந்தன், காமராஜ் துல்லா, சாய் சாதிக், தங்கராஜ், எம்.எஸ். பார்த்தீபன், உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி பார்க்கில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமை தாங்கினார். சர்க்கிள் தலைவர் வெள்ளிங்கிரி வரவேற்றார்.

    முன்னாள் மாவட்ட தலைவர் சின்னையன், முன்னாள் மேயர் வெங்கடாசலம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கட்சி நிர்வாகிகள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் காயத்ரி, விஜயகுமார், சின்னராஜ், ராமலிங்கம், திருமூர்த்தி, லாலிரோடு செல்வம், கோவிந்தராஜ், செல்வராஜ், வரதராஜ், குனிசை செல்வம், செல்வபுரம் ஆனந்த், தங்கதுரை, ஆகாஷ், மாரியப்பன், தங்கமணி கிருஷ்ணகுமார் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #congress #demonstration #centralgovernment

    பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுத்த 3ம் ஆண்டின் துவக்க நாளை முன்னிட்டு மோடி அரசை கண்டித்து 9ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். #Thirunavukkarasar #Congress #Demonetization
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 8.11.2016 அன்று நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிற வகையில் பயன்பாட்டில் இருந்த ரூபாய் 500, 1000 நோட்டுகள் அனைத்தையும் செல்லாது என சர்வாதிகாரிபோல் பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

    இதனால் கடந்த 2 ஆண்டு காலமாக மிகப் பெரிய பொருளாதார பேரழிவை நாடு சந்தித்து வருகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், சிறு வணிகர்கள், சிறு, குறு தொழில் முனைவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.



    பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவையும், மக்கள் பாதிப்பையும் கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவுறுத்தலின்பேரில் பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுத்த 3-ம் ஆண்டின் துவக்க நாளை முன்னிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளது.

    ஆகவே மாவட்டத் தலைவர்கள் வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தங்கள் கட்சி அமைப்பு மாவட்டங்களில் அமைந்துள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்களை மிக சிறப்பாக நடத்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில், எனது தலைமையில் ராஜாஜி சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வருகிற 9.11.2018 காலை 11 மணியளவில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர். ராமசாமி எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சஞ்சய்தத், டாக்டர் சிரிவல்ல பிரசாத் மற்றும் முன்னணி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Congress  #Demonetization
    சிபிஐ இயக்குனர் மீதான நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்திருப்பதால், சிபிஐ அலுவலகங்கள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #CongressProtests #AlokVerma #CBIVsCBI
    புதுடெல்லி:

    சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

    சி.பி.ஐ இயக்குனர் அலோக் வர்மாவை நீக்கிய விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்து வந்த நிலையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியதைக் கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்தது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.



    அதன்படி இன்று அனைத்து சிபிஐ அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் தயாராகினர். காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளதால், சிபிஐ அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரசின் இந்த போராட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெல்லியில் ராகுல் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. #CongressProtests #AlokVerma #CBIVsCBI
    சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதிலும் உள்ள சிபிஐ அலுவலங்கள் முன்பு காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. #CBIVsCBI #AlokVerma #CongressProtests
    புதுடெல்லி:

    சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். அத்துடன் தற்காலிக இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். மேலும் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச புகார் குறித்து விசாரிக்க புதிய குழுவும் அமைக்கப்பட்டது.

    சி.பி.ஐ இயக்குனர் அலோக் வர்மாவை நீக்கிய விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்து வந்த நிலையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.



    இந்நிலையில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு கட்சியின் தலைவர்கள் நாளை போராட்டங்களை நடத்துவார்கள் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

    சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியதற்காக நாட்டு மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்கவேண்டும், அலோக் வர்மாவை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என கட்சி வலியுறுத்த உள்ளதாகவும் அவர் கூறினார். #CBIVsCBI #AlokVerma #CongressProtests

    வில்லுக்குறியில் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பதவி விலக கோரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இரணியல்:

    இரணியலை அடுத்த வில்லுக்குறி சந்திப்பில் நேற்று குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வங்கி கடன் மோசடியில் சிக்கி உள்ள தொழில் அதிபர் விஜய்மல்லையா வெளிநாடு தப்பிச் செல்ல உதவிய மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பதவி விலக கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திர தேவ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் கிறைஸ்ட் ஜெனித் முன்னிலை வகித்தார். 

    விஜய், அருள்ராஜ், ஆஸ்கர் பிரடி, வின்ஸ் எல்ஜின், ஜெரால்டு கென்னடி, ஆல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்க வில்லை. அனுமதியின்றி போராட்டம் நடை பெற்றதால் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திர தேவ் உள்பட 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    புதுவையில் வருகிற 15-ந் தேதி மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நடைபெறும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். #congress

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    4½ ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு நாட்டு மக்களை இன்றுவரை ஏமாற்றி வருகிறது. திட்டமிட்டு ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து வருகிறது.

    ஊழலை ஒழிப்பேன் என்று ஆட்சிக்கு வந்த மோடி விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்து வருகிறார். நாட்டின் பாதுகாப்புக்காக ரபேல் போர் விமானம் வாங்க மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளிப்படை தன்மையுடன் பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்தது.

    ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தங்களின் சுய லாபத்திற்காக ஒப்பந்தங்களை மாற்றி ரபேல் போர் விமானங்களை அதிக விலைக்கு வாங்க தன்னிச்சையாக முடி வெடுத்தது. இதன் மூலம் 41,000 கோடி இமாலய ஊழல் செய்து லஞ்சம் பெற்று மோடி நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளார்.

    பொய்யையும் புரட்டையும் கூறி மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று பா.ஜ.க.வினர் பகல் கனவு காண்கிறார்கள். இவர்களின் போலி முகத்திரையை கிழித்து எறியவும், மோடி செய்த இமாலய ஊழலை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தவும் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் புதுவை வெங்கட சுப்பா ரெட்டியார் சிலையில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற இருக்கிறது.

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளரும் புதுவை மாநில பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்ட பேரணியை தொடங்கி வைக்கிறார்.

    மாலை 4 மணியளவில் காரைக்கால் மாவட்ட செயல்வீரர் கூட்டதிலும் முகுல் வாஸ்னிக் கலந்து கொள்கிறார்.

    நாட்டின் வளர்ச்சியையும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையையும் சீரழித்து கொண்டிருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு பாடம் புகட்ட காங்கிரஸ் பேரியக்க வளர்ச்சிக்கு களைப் பறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் மாநில துணை தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பி.சி.சி. உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், பிரிவு தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், வட்டார காங்கிரஸ் தலைவர்கள், இளைஞர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், சேவாதளம்.

    மிகவும் பிற்படுத்தப்பட் டோர் பிரிவு, தாழ்த்தப் பட்டோர் பிரிவு, சிறு பான்மையினர் பிரிவு, வக்கீல் பிரிவு, விவசாய பிரிவு, ஊடக பிரிவு, மீனவர் காங்கிரஸ், தொழிலாளர் பிரிவு, தலைவர்களும், நிர்வாகிகளும் மற்றும் தொண்டர்களும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணியில் தவறாமல் பங்கேற்குமாறு புதுவை பிரதேச காங் கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு நமச்சிவாயம் கூறி உள்ளார். ##congress

    கோவையில் நாளை காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பேரணி தொடங்குகிறது. இதில் திருநாவுக்கரசர் - முகுல் வாஸ்னிக் பங்கேற்கிறார்கள். #congress #thirunavukkarasar

    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தலின் படி கோவை மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சித்தாபுதூர் மகளிர் பாலிடெக்னிக்கில் இருந்து தொடங்குகிறது.

    பேரணி ஆர்.டி.ஓ. அலுவலகம் வழியாக கோவை தெற்கு தாலுகா அலுவலகம் சென்றடைகிறது.

    மத்திய பாரதீய ஜனதா அரசின் ரபேல் போர் விமான பேர ஊழலை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான சஞ்சய் தத் ஆகியோர் பேசுகிறார்கள்.

    இதில் மாநில ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, மாநில பொது செயலாளர் வீனஸ் மணி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் வட்டார தலைவர்கள்உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள். கோவை ராமநாதபுரம் வட்ட தலைவர் கணேசன் நன்றி கூறுகிறார்.

    ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கலெக்டரை சந்தித்து மனு அளிக்கிறார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு வெற்றி பெற செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #congress #thirunavukkarasar

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் காங்கிரஸ்.-தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #BharathBandh #PetrolDieselPriceHike

    கோவை:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    தமிழகத்தில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.முழு அடைப்பு போராட்டம் நடத்திய காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தி.மு.க. பெறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் மோகன் குமார்,மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராம மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் இலக்கியன் மற்றும் கொ.ம.தே.க. ஆதித் தமிழர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, த.மு.மு.க. மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    அவர்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பி.எஸ். சரவண குமார், நிர்வாகிகள் கணபதி சிவகுமார், சவுந்திர குமார், வீனஸ் மணி, காந்த குமார், வக்கீல் கருப்பசாமி, துளசிராஜ், தி.மு.க. சார்பில் பொறுப்பு குழு உறுப்பினர் நாச்சி முத்து, இளைஞரணி கோட்டை அப்பாஸ், பீளமேடு பி.டி. முருகேசன், கொ.ம.தே.க. கருப்பசாமி, தனபால், வடிவேல், சி.ஐ.டி.யூ. பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது-

    மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு இது வரை இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது.

    பெட்ரோல் 85 ரூபாயாகவும், டீசல் 76 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இது அடித்தட்டு மக்களை மிகவும் பாதித்து உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி கடுமையாக உயர்ந்து இருக்கிறது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டது. கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது.

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் பாரதீய ஜனதாவுக்கு வருகிற தேர்தலில் மிகப்பெரிய அடி விழும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BharathBandh #PetrolDieselPriceHike 

    ×